×

நேபாள நாட்டில் டென்னிஸ் போட்டி அரவக்குறிச்சி உடற்கல்வி ஆசிரியர் தேர்வு

 

கரூர், அக். 17: நேபாளில் நடைபெறவுள்ள தெற்காசிய டென்னிஸ் போட்டியில் இந்திய அணியில் கலந்து கொண்டு விளையாட அரவக்குறிச்சி கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குநர் தேர்வு பெற்றுள்ளார். இந்தியாவில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொண்டு விளையாடலாம்.

தற்போது இந்திய அணியில் கலந்து கொண்டு விளையாட அண்ணா பல்கலைக் கழக உடற்கல்வித்துறையை சேர்ந்த உதவி பேராசிரியர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், தற்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வித்துறை இயககுநராக பணியாற்றுகிறார். வரும் டிசம்பர் மாதம் நேபாளில் நடைபெறவுள்ள தெற்காசிய டென்னிஸ் பந்து போட்டியில் இந்திய அணியில் விளையாட இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நேபாள நாட்டில் டென்னிஸ் போட்டி அரவக்குறிச்சி உடற்கல்வி ஆசிரியர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tennis Tournament ,Aravakurichi Physical Education Teacher Exam ,Nepal ,Karur ,Aravakurichi ,Dinakaran ,
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...